பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து 20ம் தேதி பகல்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்கி. பகல் பத்து பத்தாம் நாளில் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு கடந்த 30ம் தேதி காலை 5.45 மணி அளவில் நடைபெற்றது.

இன்று மாலை சந்தனு மண்டபத்தில் இருந்து மணல் வெளியில் திருமங்கை மன்னனின் வேடுபறி நிகழ்ச்சியாக நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைந்தார்.
