ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதரும் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி அண்ணன் தங்கை உறவு முறையாகும் தங்கைக்கு வருடம் தோறும் மார்கழி மாத பிறப்பன்று சீர்வரிசை பொருட்கள் கொடுப்பது வழக்கம் அதன்படி நிகழாண்டில் திங்கட்கிழமை மாலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டுப்புடவை மலர் மாலைகள் மஞ்சள் குங்குமம் வளையல்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் எடுத்துவரப்பட்டது முன்னதாக இந்த பொருட்கள் அனைத்தும் ஸ்ரீ ரங்க விலாச மண்டபத்தில் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

அதன் பின்னர் ஸ்ரீரங்கத்திலிருந்து மண்டல இணை ஆணையர் ஞானசேகரன் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் சிவராம் குமார் ஆகியோர் தலைமையில் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் கோயில் பணியாளர்கள் சீர்வரிசையாக கொண்டுவரப்பட்ட பொருட்களை திருவானைக்காவல் சன்னதி வீதி நான்கு கால் மண்டபத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க யானை அகிலா முன்செல்ல ஊர்வலமாக திருவானைக்கா கோயில் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்கு எடுத்து வந்தனர் பின்னர் அதனை முறைப்படி அகிலாண்டேஸ்வரி சன்னதியின் தங்கக்கொடி மரத்தின் அருகில் இந்த மங்கள பொருட்களை திருவானைக்கா கோயில் உதவியாளர் சுரேஷிடம் வழங்கப்பட்டது இதனை மார்கழி மாதப் பிறப்பான இன்று செவ்வாய்க்கிழமை காலை சீர்வரிசை பொருட்கள் கொண்டு திரு பாவாடை நிகழ்ச்சி நடைபெறுகிறது
