ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் கிட்டத்தட்ட 80 வருடமாக குடியிருந்து வருகின்றனர். அப்பகுதியில் இன்று காலை திடீரென சில நபர்கள் உள்ளே நுழைந்து அத்துமீறி அராஜகமாக அங்கு குடியிருக்கும் மக்களிடம் எந்த விளக்கமும் கூறாமல் இடத்தை அளந்து கொண்டிருந்தனர். இதை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் அங்கு குடியிருக்கும் மக்கள் அதிகாரத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில் ஆகியோர் சென்று எதற்கு இடத்தை அளக்கிறீங்க என்று கேட்டதற்கு எந்த விளக்கமும் தராமல் தகாத வார்த்தைகளால் பேசி மீண்டும் இடத்தை அளந்தனர்.

உடனே அங்கு குடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் செந்தில் அனைவரும் திரண்டு ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் இடத்தை அளந்தவர்கள் மீது புகார் மனு அளித்தனர். இவ்விஷயத்தில் மக்கள் கலை இலக்கிய கழகம் …மக்கள் அதிகாரம் …புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி …மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் தோழர்களும் கலந்து கொண்டனர் .பொதுமக்களுடன் தோழர்களும் கலந்துகொண்டு ஊர்வலமாக முழக்கமிட்டு சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்நிலையத்தில் மனுவை வாங்கிக் கொண்டு ..உயர் அதிகாரிகள் வந்ததும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பெயரில் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்ட செயலர் ஜீவா மாவட்ட உறுப்பினர் மற்றும் கலைக்குழு பொறுப்பாளர் லதா முத்துகிருஷ்னண்..புதிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட இணைச்செயலாளர் மணலிதாஸ்..மக்கள் அதிகாரத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில் .. நிர்மலா மணிமேகலை.. முத்துக்குமார் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் ஆதிநாராயணமூர்த்தி.. ஆட்டோ சங்கத் தோழர்கள் கணேசன். மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *