ஹாசிம் ஹஜ், உம்ரா சர்வீஸ் மற்றும் திருச்சி சன்சைன் ஹஜ், உம்ரா சர்வீஸ் இணைந்து நடத்தும் உம்ரா வழி அனுப்புதல் மற்றும் விளக்கக் கூட்டம் திருச்சி மரக்கடை ஏஎம்கே ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி அரசு டவுன் காஜி ஜலில் சுல்தான் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு திருச்சி சன்சைன் ஹஜ், உம்ரா சர்வீஸ் ஹாஜி முஹம்மது நௌசாத், ஏர்வே டிராவல் ஹாஜிகள் ஜாகீர் உசேன், பசல் மற்றும் ஜனாப்கள் முஹம்மது யூசுப், சையத் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஹாஜி முகம்மது ஹக்கீம் பேசுகையில்:-
வருகிற 25-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து 20 பெண்களும், 7 ஆண்கள் உள்ளிட்ட 27-பேர் ஹாஜ் பயணத்திற்காக சென்னை அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து விமான மூலம் ஜித்தாவிற்கு அழைத்துச் செல்லப் படுகின்றனர். மேலும் மெக்காவில் 14 நாட்கள் தங்கவைக்கபட்டு இவர்களுக்கான சாப்பாடு தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் அடுத்த மாதம் 26-ம் தேதி மெக்காவிற்கு மீண்டும் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மெக்காவிற்கு செல்லும் இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசுக்கு மானியம் வழங்கிட கோரிக்கை வைத்தார்.