ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் உலக சுகாதார மையத்தின் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி ஆண்டுதோறும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர் சிறப்பு மருத்துவமனை சார்பாக திருச்சி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு மலைக் கோட்டையை இளஞ்சிவப்பு வண்ண விளக்குகளால் அலங்கரித்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக இந்த பிங்க் அக்டோபர் மாதத்தை திருச்சி மக்களிடையே மார்பக புற்றுநோயால் இறப்போரின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்ற எண்ணத்தில் இந்த முயற்சியை ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர் சிறப்பு மருத்துவமனை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
மேலும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு விளம்பர வாகனம் திருச்சி முழுவதும் சுற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு பிங்க் அக்டோபர் மற்றும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு வாகனத்தை திருச்சி மலைக்கோட்டை வாசலில் திருச்சி மாவட்ட கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அருகில் இணை இயக்குனர் சுதர்சன் மற்றும் உதவி இயக்குனர் விஜயராணி, ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர் சிகிச்சை மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கோவிந்தராஜ், புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் சுசி பிரியா கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.