ராமநாதபுரம் மாவட்டம் கள்ளர் தெருவைச் சேர்ந்த வாலிபர் அருண் பிரகாஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த நிலையில், அன்றைய தினம் பாஜக தேசிய தலைவராக இருந்த எச்.ராஜா அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மதம் மோதலையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இது குறித்து யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் திருச்சி மாநகர காவல் அதிகாரிகளிடம் தொடர்ந்து மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துவரும் எச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். அப்போதைய அதிமுக அரசு புகாரின் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில்
தற்போது ஓராண்டிற்குப் பிறகு இப் புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளனர். அதனடிப்படையில் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் ரபீக் மற்றும் அந்த அமைப்பின் நிர்வாகிகளை அழைத்து விசாரணை நடத்தினர். மேலும் விசாரணை முறையாக நடத்தி சமூக மற்றும் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் எச்.ராஜாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துக் கொண்டனர்.