தமிழ்நாடு ஆசிரியர்,அரசு ஊழியர் அரசு பணியாளர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ ஜியோ) சார்பில் மாநில உயர்மட்டக்குழு கூட்டம், மாவட்டநிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு பிறகு.மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், தியோடர் ராபின்சன், பாஸ்கரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தார். அப்போது அவர் கூறியதாவது:- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மாநில ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் படி வருகின்ற ஜனவரி 6ந் தேதி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.

இதில் தமிழக முழுவதும் இருந்து ஆறு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.இந்த வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது வகையில் முன்னதாக பல்வேறு கட்டங்களாக எங்களுடைய கோரிக்கைகளை வெளிப்படுத்த இருக்கிறோம். அதன்படி வருகிற 13-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த இருக்கிறோம். அதன் பிறகு 27 ந்தேதி முதல் குறுவட்ட பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறோம். எங்களுடைய கோரிக்கைகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பரிசீலனை செய்து நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். இந்த காலவரையற்ற போராட்டம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் உள்ளிட்டவருக்கு முறையாக தகவல் கூறிவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
