திருச்சி மாவட்ட மொத்த மீன் வியாபார நல சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.கொரோனாவின் தாக்கம் திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் நமது உயிர் விலை மதிப்பற்றது ஆகையால் வியாபாரம் ஒன்றே நம் நோக்கமல்ல . நமக்கும் நம் குடும்பத்தின் பாதுகாப்பை கருதி

வருகின்ற 20.05.2021 ( வியாழன் கிழமை ) முதல் 30.05.2021 ( ஞாயிற்றுக்கிழமை ) வரை மொத்த மீன் வியாபாரம் காசி விளங்கி மார்க்கட்டில் செயல் படாது என்றும் மார்க்கட்டில் உள்ள அனைத்து கதவுகளும் அடைக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம் . மேலும் மொத்த வியாபரிகள் – வேறு எந்த இடத்திலும் வியாபாரம் செய்ய கூடாது என திருச்சி மாவட்ட மொத்த மீன் வியாபார நல சங்கம் முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்