திருச்சி மாவட்டம் லால்குடி மேல தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் சிவனேசன் வயது 43 இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி இவர்களுக்கு மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். விவசாயி சிவனேசன் உள்ளிட்ட 6 குடும்பங்கள் லால்குடி வந்தலை மேலத்தெரு பகுதியில் அரசு பள்ளி அருகே 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய தலைவர் முருகவேல் தூண்டுதலின் பேரில் இவர்களின் இடத்தின் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை சுற்றி சுற்று சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
இதனால் அருகில் குடியிருக்கும் வீடுகளுக்கும் பள்ளியின் சுற்று சுவருக்கும் இடையே 2 அடி முதல் 3 அடி வரை மட்டுமே நடைபாதைக்கு இடம் விடப்பட்டுள்ளதால் விவசாயி கணேசன் உள்ளிட்ட குடும்பத்தினர் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இது குறித்து புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் லால்குடி தாசில்தாரிடமும் நடைபாதைக்கு கூடுதல் இடத்தை விடக்கோரி மனு அளித்தார். இந்த மனுவின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயி சிவனேசன் மற்றும் அவரது மனைவி ரேவதி திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது அங்கு அருகில் இருந்த நுண்ணறிவு பிரிவு காவலர் பொன்னுசாமி மற்றும் பத்திரிக்கையாளர்கள் மண்ணெண்ணை ஊற்றி கொண்ட தம்பதியினரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினார். இது குறித்து கண்டோன்மெண்ட் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கலெக்டர் அலுவலகம் வந்த போலீசார் தம்பதியினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீக்குளிக்க முயன்ற விவசாய தம்பதியை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி காப்பாற்றிய நுண்ணறிவு பிரிவு காவலர் பொன்னுசாமி மற்றும் கேமராமேன் கரீம்
இதுகுறித்து விவசாயி சிவனேசன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது.
ஊராட்சி ஒன்றிய தலைவர் முருகவேல் தூண்டுதலின் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் எங்கள் இடத்திற்கு நடைபாதை விடாமல் பள்ளியின் சுற்று சுவரை பியுள்ள இதனால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளோம் குடிதண்ணீர் கூட எடுத்து வர முடியாதபடி பாதை அடைக்கப்பட்டதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தோம், எனவே இன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து நானும் எனது மனைவியும் வந்தோம் என தெரிவித்தார்.