திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பீல் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையொப்பமிட்டு தொடங்கி வைத்து, உறுதிமொழி எடுத்து சிறப்புரையாற்றினார்.

மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்புக் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடையே நடைபெற்ற கும்மியடிப் பெண்ணே கும்மியடி, பெண்கள் நாட்டின் கண்கள். பெண்ணுரிமை சாத்தியமே. இந்த நூற்றாண்டின் சாதனைப் பெண்கள், பெண்களும் மனித உரிமைகளும், படைக்கும் பிரமாக்கள் என்ற தலைப்புகளில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ. மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டு தெரிவித்தார்..

முன்னதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்நிகழ்வில், மாவட்ட சமூகநல அலுவலர் நித்யா. மாவட்ட அலுவலர் ரேணுகா, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் தஸ்தகீர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பேபி, மாமன்ற உறுப்பினர் சுரோஷ், பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவ, மாணவிகள். பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

கொள்கை மாற்றத்தினால் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கான சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது உண்மைதான். இரண்டு நாட்களில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சனை தீர்க்கப்படும். தொடக்கப் பள்ளிக்கான நிதி ஒதுக்கீடு அடிக்கல் நாட்டு விழா வருகிற 1-ம் தேதி காட்பாடியில் தமிழக முதல்வர் முதற்கட்டமாக 240 கோடியில் நடைபெற உள்ளது. 7500 கோடி ரூபாய் பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டு திட்டத்தில் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடங்கள் ,கழிப்பறைகள், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட அனைத்தும் சரி செய்யப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *