திருச்சி, திருவானைக்கோவில், ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக தேசத்தைக் கட்டியெழுப்புதல்: புதுமை, உள்ளடக்கம் மற்றும் ஒருமைப்பாடு குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாடு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ் வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கின் அறிக்கையை கல்லூரியின் முதல்வர் முனைவர் பிச்சைமணி வழங்கினார்.
இந்த தேசிய அளவிலான கருத்தரங்கிற்கு நிதி ஆலோசகரும், சுதேசி ஜாக்ரண் மஞ்சின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சுந்தரம் கலந்து கொண்டு இந்த கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றினார் அதில் தன்னிறைவு அடைந்த பொருளாதாரக் கொள்கைகளின் முக்கியத்துவத்தையும், இளைஞர்கள் படைப்பாற்றல் மற்றும் தொழில் முனைவோராக முன்னேற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். மேலும் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவில் 25 முதல் 30 டன் வரை கோல்டு உள்ளது இதன் மதிப்பு 4 ட்ரில்லியன் டாலர் ஆகும் குறிப்பாக இந்தியாவின் கடன் 700 மில்லியன் தான் உள்ளது. இதில் 20 சதவீதம் கோல்டு விற்றாலே நமது இந்தியாவின் கடனை அடைத்து விடலாம் என தெரிவித்தார்.
நிகழ்வின் நிறைவாக, வணிகவியல் துறைத் தலைவரும், மேலாண்மை மற்றும் வங்கி மேலாண்மைத் துறை புல முதன்மையர் முனைவர் சுபா நன்றி உரை நிகழ்த்தினார். இந்த கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேசிய அளவிலான கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரி சிவக்குமார் செய்திருந்தார்.