திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் கொரோவின் பாதிப்பு எப்படி உள்ளது என்றும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் அனைவரும் அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்தனர்.



திருச்சி பெல் தொழிற்சாலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பு குறித்து முதலமைச்சரின் உத்தரவுப்படி ஆய்வு செய்ய உள்ளோம். தயாரிப்பு பணிகளைத் தொடங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் எப்படி வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளதோ, அதேபோல திருச்சியிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கு வார் ரூம் அமைக்கப்பட உள்ளதாகவும் அதில் டிஆர்ஓ மற்றும் அவருக்கு கீழ் இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் அவர்களை தொடர்பு கொண்டு எந்த உதவிகளையும் பெறலாம் என்ற ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் ரெம்டெசிவர் மருந்தானது மத்திய அரசிடமிருந்து பெறுவது மிகக் குறைவாக இருப்பதால் அதை அதிகப்படுத்தி பெற மத்திய அமைச்சரிடம் தமிழக முதல்வர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் மேலும் ஒரு நாளைக்கு 300 பேருக்கு கொடுக்கப்படும் இடத்தில் 500க்கும் அதிகமானோர் கூட்டமாக சேர்ந்து வரிசையில் நின்று காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அதனை சரி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதில் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி நாங்கள் முதலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாகவும், தொகுதிகளுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பல பெற்றோர்களிடம் இருந்து நானும் பல புகார்களை பெற்று வருகிறேன் குறிப்பாக ஒடாத பேருந்துக்கு கட்டணம் வசூலிப்பதாகவும் பள்ளிக்கு வராத நிலையில் பள்ளி சீருடை கான கட்டணம் வசூலிப்பதும் என்று தொடர்ந்து வசூல் செய்து வருவதாக எனக்கு கூட வந்த புகாரின் அடிப்படையில் விரைவில் அதுகுறித்து தனியார் பள்ளிகளோடு ஆலோசனை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.