Month: May 2022

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை வரவேற்ற திருச்சி கலெக்டர், மேயர்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து…

திருச்சி மத்திய சிறையில் மயங்கி விழுந்த 6-பேர் – GH-ல் அனுமதி.

தமிழ்நாட்டில் தஞ்சமாக அடைந்த அகதிகளானவர்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் வாழ்வாதாரத்திற்காக இந்திய கடவுச்சீட்டு எடுக்க முயன்ற குற்றத்திற்காக கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக வெளிநாட்டவர் சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதேபோல் கடல் வழியாக இங்கே வந்த ஈழத்தமிழர்கள் இங்கு உள்ளனர். மேலும்…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் 93 லட்சம் பணம், 143 கிராம் தங்கம்.

108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலுக்கு இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் ரொக்கம்,தங்கம்,வெள்ளி என‌ காணிக்கையாக உண்டியல்களில் செலுத்துகின்றனர். கோயில் உண்டியல்கள் மாதம் தோறும்…

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் – கலெக்டர் சிவராசு அழைப்பு.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வரும் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ் வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார். முகாமில் தனியார்துறை நிறுவனங்கள்…

திருச்சி மாநகராட்சியின் முதல் பட்ஜெட் வரும் 30 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் – மாநகராட்சி குழு கூட்டத்தில் மேயர் அறிவிப்பு.

திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் களுக்கான அவசர குழு கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் இன்று மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை மேயர் திவ்யா மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள்…

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமையில் கோரிக்கை வலியுறுத்தி பெருந்திரள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கை உரையை மாநிலத் துணைத் தலைவர் சிவக்குமார் வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில்…

முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 18 சிறார்களுக்கு அறுவை சிகிச்சை – கலெக்டர் தகவல்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் ஓராண்டு சாதனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில். தேசிய சிறார் நலத்திட்டத்தில் 313 சிறார்களை…

இறந்தும் குட்டி போட்ட விஷ பாம்பு – காட்டில் விடப்பட்ட 50 குட்டிகள்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹம்பனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜசேகர். இவா் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் டிராக்டா் மூலம் உழுது கொண்டிருந்தாா். அப்பொழுது விவசாய நிலைத்தில் கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு ஒன்று படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி…

மேலன்பில் சுந்தரராஜப் பெருமாள் கோவிலில் புதிய தேர் – வடம் பிடித்து தொடங்கி வைத்த அமைச்சர்கள்.

திருச்சி மாவட்டம்,லால்குடி வட்டம், மேலன்பில் கிராமத்தில் உள்ள அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் புதிதாக செய்யப்பட்ட திருத்தேரின் வெள்ளோட்டத்தினை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…

திருவானைக் கோவில் யானை அகிலாவிற்கு 20-வது பிறந்த நாள் விழா கொண்டாடிய பக்தர்கள்.

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலில் அகிலா என்ற யானை கடந்த 11 வருடங்களாக சுவாமி, அம்பாள் திருமஞ்சன அபிஷேகத்திற்கு புனிதநீர் எடுத்து வருவது, உச்சிகால பூஜை மற்றும் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட உற்சவங்களில்…

தேசிய ஐவர் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் கடந்த 20ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தேசிய அளவிலான 19 வயதுக்குட்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கும் 14ஆவது ஜூனியர் சாம்பியன்ஷிப் ஐவர் கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. இந்தியாவை சேர்ந்த 500க்கும்…

தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு – பஸ் ஓட்டுனர், நடத்துனருக்கு குவியும் பாராட்டு.

திருச்சி தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 35).இவர் அமெரிக்காவில் வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில் திருச்சி செஷன்ஸ் கோர்ட் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பிலிருந்து குடும்பத்தோடு சத்திரம் செல்வதற்காக சத்திரம் செல்லும் பஸ்ஸில் ஏறியுள்ளார். பின்னர் சத்திரம் வந்தவுடன்…

இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதைப் பொருள் விற்ற நபர் குண்டர் சட்டத்தில் கைது.

திருச்சி சங்கிலியாண்டபுரம் , மணல்வாரித்துறைரோடு அருகில் இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்ததாக குற்றவாளி ரமேஷ் ( எ ) துப்பாக்கி ரமேஷ் வயது 52 என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 3 கிலோ 100 கிராம்…

காந்தி மார்கெட் செல்லும் வழியில் உடைந்தோடும் கழிவு நீர் குழாயை சரிசெய்ய SDPI வர்த்தகர் அணி கோரிக்கை.

திருச்சி,காந்தி மார்க்கெட் மணிகூண்டு மீன் மார்க்கெட் செல்லும் வழியில் கழிவு நீர் குழாய் உடைந்து மீன் மார்க்கெட் செல்லும் மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகளும் நோய்த் தொற்றும் அபாயமும் ஏற்படுகிறது, வாரத்திற்கு இரண்டு முறை இதுபோன்று…

வங்கி எழுத்தர் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயம் இல்லை – திருச்சியில் தி.க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

வங்கி எழுத்தர் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயமில்லை என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் வட மாநிலத்தவருக்கே வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் வங்கி எழுத்தர்…