சமூக நீதிக்காக பாடுபடுவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தேர்வு செய்யப்படுகிறார்.

2023-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு வரவேற்கப்படுகிறது. எனவே உரிய சமூக விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம்.தங்களது விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

2023ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.09.2023 ஆகும். எனவே திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வாழ்க்கைத்தரம் உயர் சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் அவர்களது பெயர். சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினப் நல் அலுவலகத்தில் உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய காலத்திற்க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். என்கிற தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *