Month: August 2023

காழ்புணர்ச்சி காரணமாக ஓபிஎஸ் தற்போது கொடநாடு விவகாரம் குறித்து பேசி வருகிறார் – திருச்சியில் கே.பி முனுசாமி குற்றச்சாட்டு.

மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு தொடர்பான திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, உதயகுமார், தங்கமணி வேலுமணி, கே பி முனுசாமி உள்ளிட்ட பலர்…

ஏர்போர்ட்டில் 1188 கிராம் எடை கொண்ட 71.72 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த பயணிகள் இருவரின் சூட்கேசில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து கடத்தி வந்த 1188…

திருச்சியில் வருகிற ஆகஸ்ட் 3-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது.

திருச்சி கொட்டப்பட்டு கோழி பண்ணை சாலையில் செயல்பட்டு வரும் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வருகிற ஆகஸ்ட் 3-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது இந்த பயிற்சியில் நாட்டுக்கோழி இனங்கள் தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழி இனங்கள்…

திருச்சியில் 5-வது நாளாக விவசாயிகள் உடல் முழுக்க நாமம் போட்டு அரை நிர்வாண தொடர் காத்திருப்பு போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 5- வது நாளாக நாமம் போட்டு, அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில்…

கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் உண்மை குற்ற வாளிகளை கைது செய்ய கோரி திருச்சியில் ஓ.பி.எஸ். அணி – அ.ம.மு.க. வினர் ஆர்ப்பாட்டம்.

கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல் முருகன் கோவில் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் கழக அமைப்பு செயலாளரும் திருச்சி மாநகர் மாவட்டக் கழக செயலாளரும்,…

உலக தாய்ப்பால் தினம் – விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மருத்துவ கல்லூரி மாணவிகள், செவிலியர்கள்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் ஓன்று முதல் ஒருவார காலம் உலக தாய்ப்பால் தினமாக அனுசரிக்கப்படுகிறது. தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைகளின் வாழ்வின் அடித்தளமாக கருதப்படுகிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு பெற்றோரும் அறிய வேண்டும் என்ற நோக்குடன் உலகம் முழுவதும் ஐக்கிய நாடு குழந்தைகள்…