Month: August 2023

எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் ஸ்ரீலங்கன் யாழ் உணவு திருவிழா இன்று தொடங்கியது. கண்காட்சிக்காக வைக்கப் பட்டிருந்த உணவு வகைகள்.

திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் ஸ்ரீலங்கன் யாழ் உணவு திருவிழா இன்று தொடங்கியது. இத்திருவிழா இன்று (ஆகஸ்ட் 18ஆம் தேதி) முதல் வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஸ்ரீலங்கன் யாழ் உணவு வகைகள் அனைத்தும் சரியான விலையில், தினமும் மதியம்…

டி.டி.வி தினகரன் வருகையால் போக்கு வரத்தில் சிக்கித் தவித்த ஆம்புலன்ஸ் – முகம் சுழித்த வாகன ஓட்டிகள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக…

திருச்சியில் சாரணர், சாரணியர் இயக்கம் சார்பாக முதலுதவி குறித்த 5 நாள் பயிற்சி பட்டறை- மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு.

தென்னக ரயில்வே சாரணர், சாரணியர் இயக்கம் சார்பாக முதலுதவி குறித்த 5 நாள் பயிற்சி பட்டறை திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறையில் சென்னை, திருச்சி, மதுரை, பாலக்காடு, பெரம்பூர், சேலம், திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களில் இருந்து…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் 22வது நாளாக விவசாயிகள் முக்கொம்பு காவிரி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கர்நாடக முன்னாள் முதல்வர், பிஜேபி தலைவர் பசவராஜ் பொம்மை காவிரியில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது, மீறி திறந்தால் போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருப்பது…

சசிகலாவின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஒத்தக்கடை செந்தில் தலைமையில் கோவிலில் சிறப்பு பூஜை செய்து பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

வி.கே.சசிகலா ஜெயலலிதாவின் தோழியாகவும், அதிமுகவின் முக்கிய நபராக கருதப்பட்டவர்.கட்சியில் இவரின் ஆதரவாளர்களால் சின்னம்மா என்று அழைக்கப்பட்டார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் இவரை பொதுச் செயலாளர் அதிமுகவில் அறிவித்தனர். 2016ம் ஆண்டு டிசம்பர் முதல் 2017 செப்டம்பர் வரை கட்சியின் பொதுச் செயலாளர்…

திருச்சி வந்த அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு பிரச்சார வாகனம் – முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, வளர்மதி தலைமையில் மலர் தூவி வரவேற்பு.

அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கழக அம்மா பேரவை, கழக இளைஞர் பாசறை, கழக மகளிர் அணியில்…

குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தால் சிறை தண்டனை – கலெக்டர் பிரதீப் குமார் எச்சரிக்கை.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற ஆடி அமாவாசையை முன்னிட்டு திதி கொடுக்கும் மக்கள் அதிகம் கூடியதால், அங்கு பெண்கள் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த நிலையில், அது குறித்த தகவல் அறிய…

மாற்றம் அமைப்பு சார்பில் 77வது சுகந்திர தினம் விழாவை முன்னிட்டு மரக்கன்று நட்ட டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் விளையாட்டு குழுவினர்.

திருச்சி மாவட்டம் புறநகர் பகுதியான லால்குடி பகுதியில் மாற்றம் அமைப்பு மற்றும் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் விளையாட்டு குழுவினர் சார்பில் நமது இந்திய நாட்டின் 77 வது சுகந்திர தினம் சிறப்பாக கொண்டாப்பட்டது நம்முடைய நாடு சுகந்திரம்…

21-வது நாளாக விவசாயிகள் சாக்கை உடையாக அணிந்து காத்திருப்பு போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 21 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கோனி சாக்கை உடையாக அணிந்து…

திருச்சி வீரா ஜிம் சார்பில் மிஸ்டர் ஸ்ட்ராங் மேன் தமிழ்நாடு 2023ம் ஆணழகன் போட்டி -ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்.

திருச்சியில் புகழ் பெற்ற வீரா ஜிம் மற்றும் பிட்னஸ் வீரா ஸ்போர்ட்ஸ் அண்ட் துரோபி மற்றும் திருச்சி ஐஎஃப்எஃப் சார்பில் மிஸ்டர் ஸ்ட்ராங் மேன் தமிழ்நாடு 2023 மாநில அளவிலான ஆணழகன் போட்டி திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள மரியம் மங்கல…

திருச்சியில் 20வது நாளாக விவசாயிகள் ருத்ராட்ச மாலை அணிந்து, நெற்றில் பட்டை போட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 20 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ருத்ராட்சம் மாலை அணிந்து, பட்டை…

திருச்சியில் நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்காத அரசு ஊழியர்களுக்கு “மெமோ” அதிகாரி எச்சரிக்கை பேச்சு

இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மேலும் சுதந்திர தினத்தை போற்றும் விதமாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை பாரத பிரதமர் மோடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் அதேபோல் சென்னை கோட்டை கொத்தாலத்தில்…

திருச்சி இந்திரா காந்தி மகளீர் கல்லூரி மாணவிகள் 50-பேர் மயக்கம் – உணவு கூடத்திற்கு பூட்டு போட்ட அதிகாரிகள்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள இந்திரா காந்தி மகளீர் கல்லூரியில் சனிக்கிழமை இரவில் இருந்து சுமார் 50 மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து…

திருச்சி ஜங்ஷன் கோட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் 77வது சுதந்திர தின விழா – பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு பரிசுகள் வழங்கி கொண்டாட்டம்.

திருச்சி மாநகர மாவட்ட ஜங்ஷன் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 77 வது சுதந்திர தின விழா பீமநகரில் நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல் தலைமை தாங்கினார். 51வது வார்டு தலைவர்.கண்ணன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் வக்கீல்…

ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுத்து காவிரியில் புனித நீராடிய மக்கள்.

ஆடி மாதத்தில் வரும் அமாவாசையை ஒட்டி நீர் நிலைகளில் புனித நீராடிய பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித…