Month: November 2023

டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ஆதரவாக திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ராணுவ வீரர்களின் கேண்டீன் அருகே மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மேஜர்…

திருச்சி ஜோசப் கல்லூரியில் நடந்த “லசாக் பொன்விழா சங்கமம்” விழாவில் சிவா எம்.பி பங்கேற்பு.

இயேசு சபையினரால் 1973ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட லசாக் இயக்கத்தின் பொன்விழா சங்கமம் திருச்சி புனித வளனார் கல்லூரியில் இன்று நடைபெற்றது. புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ், லசாக் இயக்க இணை நிறுவனர் அருள்முனைவர் ஜோசப் சேவியர், பள்ளியின் தாளாளர்…

திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 76 ஆம் ஆண்டு விழா அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு.

திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 76 ஆம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சி சேவா சங்க செயலாளர் சரஸ்வதி வரவேற்புரை ஆற்றிட சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நாகம்மை தலைமை தாங்கினார். பொருளாளர்…

பி.டி.ஏ ஆசிரியர்கள், அலுவலர்களின் ஊதியத்தினை உயர்த்தி வழங்க கோரி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் முன்பு தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் முன்பு முழக்க போராட்டம் திருச்சி தஞ்சை மண்டலங்களின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக…

2019 மோட்டார் வாகன சட்டத்தை கைவிட கோரி சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் CITU மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் கலந்து கொண்டு…

திமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போதெல்லாம் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்கவுண்டரில் கொல்லப் படுகிறார்கள் – நிறுவனர் சரவண தேவர் குற்றச்சாட்டு.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த சிறுகனூர் அருகே காவல்துறையினர் பிரபல ரவுடி கொம்பன் ஜெகன்(30) என்பவரை என்கவுண்டரில் சுட்டு கொன்ற சம்பவம் குறித்து கள்ளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் சரவண தேவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர் கூறுகையில் :-…

எதிர்கட்சி போல் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் – தேசிய தலைவர் காதர் மொய்தீன் பேட்டி.

திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில்..,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணை அமைப்புகளான அனைத்திந்திய கேரளா முஸ்லிம் சென்டர் சார்பில் நாளை 25 திருமண ஜோடிகளுக்கு இலவச…

திருச்சி மலைக் கோட்டை மாணிக்க விநாயகருக்கு புதிய தேர் வெள்ளோ ட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்கள்.

பிரசித்தி பெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட 8 லட்ச ரூபாய் மதிப்பிலான, தேக்கு மரத்திலான தேரினை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

திருச்சியில் சாதிய தீண்டாமை பாகுபாட்டை கடை பிடிப்பதாக ஆயர் மற்றும் பங்குத் தந்தையை கண்டித்து தலித் கிறிஸ்தவர்கள் பேட்டி.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், புறத்தாக்குடி – மகிழம்பாடி கிராமங்களில் வசிக்கும் தலித் கிறிஸ்தவர்களின் செய்தியாளர் சந்திப்பு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் பேசிய தலித் கிறிஸ்துவ மக்கள் ஸ்டீபன் தாஸ் கூறியது……

அனைத்து பஸ்களில் கட்டாயம் கதவு பொருத்த வேண்டும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

திருச்சியில், த.மா.கா., தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நாம் காலம் தாழ்த்தாமல் கடமையை செய்வதற்கு, வந்தே பாரத் ரயிலில் சேவை உள்ளது. திருவண்ணாமலையில், விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்ட வழக்குகளை, அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். சம்பா…

மறைந்த தலைவர்களின் சிலைகளிடம் கோரிக்கை மனு கொடுத்து நூதனப் போராட்டம் நடத்திய விவசாயி சின்னதுரை.

திருச்சி மாவட்டத்தில் உள்ள நீராதாரங்களை காப்பாற்ற தவறிய நீதித்துறையின் அலட்சியத்தை கண்டித்தும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய – மாநில அரசுகளை கண்டித்தும், திருச்சி மாவட்டம் அல்லித்துறையில் உள்ள பேரறிஞர் அண்ணா, சோமரசம் பேட்டையில் உள்ள மறைந்த…

எஸ்ஐயை தாக்கி தப்பிக்க முயன்ற ரவுடியை என்கவுண்டர் செய்த போலீசார்.

திருச்சி திருவெறும்பூர், சர்க்கார் பாளையம், பனையக்குறிச்சியை சேர்ந்த, முத்துக்குமார் – சரஸ்வதி ஆகியோரின் மகன் ஜெகன். எலக்ட்ரானிக் டெலி கம்யூனிகேஷன் பட்டதாரியான இவர். தனது 17 வயதில் அடிதடி வழக்கில் கைதானார். நண்பர்களுக்காக அடிதடி வழக்கில் ஈடுபட்டு, அது நாளடைவில் பெரிய…

சென்னையில் வைர விழா மாநில மாநாடு – தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் முருகையன் பேட்டி.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியா ஹோட்டலில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். மேலும் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் 38…

ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்ட ரகசிய வாக்கெடுப்பு – எஸ்.ஆர்.எம்.யு துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் பங்கேற்பு.

2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சாப்படி, ஓய்வூதியத்தில் 40 சதவீதம் கம்யூனிட்டேஷன் வழங்க வேண்டும் ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு பிறகும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன…

குண்டர் சட்டத்தின் கீழ் விவசாயிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முற்றுகை.

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமத்தில், சிப்காட் விரிவாக்கத்திற்கு 1,200 ஏக்கரை கையகப்படுத்த அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்திய ஏழு விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள்…