Month: May 2024

பாஜக நிர்வாகி சூர்யா சிவா மீது – நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி கமிஷனரிடம் புகார் மனு:-.

திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி அவர்களிடம் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி துரைமுருகன் என்கிற சாட்டை துரைமுருகன் பாரதி ஜனதா கட்சியின் ஓ பி சி பிரிவு மாநில பொதுச் செயலாளர் சூர்யாசிவா மீது புகார் மனு அளித்தார்.…

திருச்சி ரோட்டரி 3000 மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் 2 நாள் கண்காட்சி – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி ரோட்டரி மாவட்டம் 3000 திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆப் திருச்சி பட்டர்பிளைஸ் இணைந்து நடத்தும் ரோட்டோ எக்ஸ்போ 2024 திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று தொடங்கியது.இந்த கண்காட்சி நாளையும், நாளை மறுநாளும் தொடர்ந்து நடக்கிறது.கண்காட்சியை அமைச்சர்…

ஹேக்கர்ஸ் ஸ்கேட்டிங் கிளப் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி:-

திருச்சி ரோட்டரி சங்கம் மற்றும் ஹேக்கர்ஸ் ஸ்கேட்டிங் கிளப் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த போதை பழக்கத்திற்கு எதிரான ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஸ்கேட்டிங்…

தேர்தல் ஆணையம் பா.ஜ.க விற்கு ஆதரவாக செயல் படுவதாக குற்றம்சாட்டி மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்:-

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆறு கட்டங்களாக தேர்தல் முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட தேர்தல் வரும் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆறு கட்ட தேர்தல்களிலும் தேர்தல் ஆணையம் பா.ஜ.க…

பிரதமர் மோடியை கண்டித்து விவசாயி தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் சுடுகாட்டில் விவசாயிகள் பிணம் போல் படுத்து நூதன போராட்டம்:-

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த தேர்தலின் போது விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை…

திருச்சி ஏர்போர்ட் வந்த பயணி தொடையில் மறைத்து வைத்து கடத்திய 1 கோடியே 3 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 424 கிராம் தங்கம் பறிமுதல்:-

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் வந்திறங்கியது. அதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது, பயணி ஒருவர் தனது தொடை பகுதியில் (knee…

திருச்சியில் ஆவின் ஒப்பந்த வேன் ஓட்டுனர்கள் திடீர் போராட்டம் – பால் பாக்கெட்டுகள் கொண்டு செல்லும் பணிகள் பாதிப்பு:-.

திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள கொட்டப்பட்டியில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் பெரம்பலூர், அரியலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 300-க்கும் மேற்பட்ட பால் முகவர்களுக்கு 1.20 லட்சம்…

மேஜர் சரவணன் 25ம் ஆண்டு நினைவு நாள் – 56 அடி உயர தேசியக் கொடி அமைக்க கோரிக்கை:-

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி, அவர்களது இரண்டு முகாம்களை தனது ஏவுகணையால் தாக்கி அவற்றை முழுவதும் அழித்துவிட்டு பின்னர் முதல் ராணுவ அதிகாரியாக வீர மரணம் அடைந்தவர் நமது திருச்சியை…

மேஜர் சரவணன் 25-வது நினைவு தினம் – பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண் நேரு மலர் வளையம் வைத்து மரியாதை:-

1999இல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற கார்கில் போரில் திருச்சியை சார்ந்த மேஜர் சரவணன் வீர அடைந்தார் அவர்க்கு இந்திய அரசு பாட்டாலிக்கின் கதாநாயகன் என்றும் நம் நாட்டின் உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கி கௌரவித்து உள்ளது. மேஜர் சரவணனின்…

தமிழக வெற்றி கழகம் மாநாடு திருச்சியில் நடத்த திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் கோரிக்கை – மண்டல தலைவர் செந்தில் பேட்டி:-

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் திருச்சி மாவட்ட கிழக்கு தொகுதி சார்பில் சங்கிலியாண்டபுரம் பகுதியில் மண்டல தலைவர் செந்தில் தலைமையில் பொதுமக்களுக்கு குஸ்கா, முட்டை, சிக்கன் கிரேவி, தால்சா உள்ளிட்டவை அன்னதானமாக வழங்கப்பட்டது. முன்னதாக இந்த கோடை…

திருச்சி ஏர்போர்ட்டில் தடை செய்யப்பட்ட 32 லட்சம் மதிப்பிலான இ -சிகரெட் பறிமுதல்:-

கோலாலம்பூரில் இருந்து ஏர்லைன் விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணி ஒருவரின் உடமையை தீவிர சோதனை செய்தனர். அப்போது அவர்…

திருச்சியில் நடந்த ஜல்லிக்கட்டு – காளைகளும் காளையர்களும் பங்கேற்பு:-

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக வீரர்களுக்கும் கால்நடை மருத்துவர்கள் காளைகளுக்கும் உடல் பரிசோதனை செய்து களத்திற்கு அனுப்பினர். போட்டியினை லால்குடி ஆர்டிஓ தலைமையில் உறுதிமொழி ஏற்று தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து…

வருவாய் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்:-

தமிழகம் முழுவதும் கோயிலுக்கு சொந்தமாக பல லட்சம் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களை விவசாயிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்படுகிறது இந்த நிலங்களை குத்தகைக்கு எடுக்கும் விவசாயிகள் நெல் பயிரிட்டு வருகின்றனர். தமிழக அரசின் விவசாயத்துறை நிலங்களில் மாற்றுப் பயிர் விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது.…

மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை:-

இந்தியாவின் தேச தந்தையும் முதல் பிரதமருமான *பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சேவா சங்கம் பெண்கள் பள்ளி எதிரே உள்ள ஜவஹர்லால் நேருவின் திருவுருவச் சிலைக்கு திருச்சி மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர்…

குப்பையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை – மீட்டெடுத்த தாய்மார்கள்:-

திருச்சி தேவதானம் ரயில்வே கேட் அருகில் இன்று மதியம் பூசாரி தெருவை சேர்ந்த அம்மு மற்றும் வளர்மதி ஆகிய இருபெண்கள் அப்பகுதியில் உள்ள குப்பை மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர் அப்போது அருகிலுள்ள முட்புதரில் இருந்து பச்சிளம் குழந்தையின்…