Month: July 2024

திருச்சி சிறையில் இருந்து ஜாமினில் விடுவிக்கப் பட்ட, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு:-

இரு வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறைச்சாலையில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் நீதிமன்ற உத்தரப்பின்படி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். நேற்று அவருக்கு கரூர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் ஜாமீன்…

திருச்சியில் கட்டப்பட உள்ள கலைஞர் நூலகம் இடத்தை அமைச்சர் உதயநிதி பார்வையிட்டு ஆய்வு:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் காவேரிக்கரையில் அமைந்த மாநகரமான திருச்சி மாநகரில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்” என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து திருச்சி மாநகரில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம்…

டெல்லிக்கு செல்ல முன்பதிவு செய்த பணத்தை திரும்பத் தர கோரி DRM அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகளால் பரபரப்பு:-

உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகா அரசு தமிழகத்திற்கு மாதாமாதம் திறக்கவேண்டிய தண்ணீரை திறக்க மறுப்பதால், கர்நாடகா அரசிடம் இருந்து உச்ச நீதிமன்றம் 1 இலட்சம் கோடி இழப்பீடு பெற்று தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும், காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக்…

திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து பொது மக்களுக்கு அதிமுகவினர் துண்டுபிரசுரம் விநியோகம்:-

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் இருந்து என்.எஸ்.பி ரோடு வழியாக தெப்பக்குளம், நந்தி கோவில் தெரு, ஆண்டாள் வீதி ஆகிய பகுதிகளில் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு…

அனைத்திந்திய தோல் மருத்துவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு சார்பாக திருச்சியில் தோல் மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

அனைத்திந்திய தோல் மருத்துவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு சார்பாக தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த 150 தோல் மருத்துவர்களுக்கு தோல் லேசர் மற்றும் அழகியில் செயற்பாட்டியல் குறித்த முகாம் திருச்சியில் நடைபெற்றது. இம்முகாமில் சங்கத்தின் தலைவர் டாக்டர் பத்மாநந்தன்; செயலாளர் டாக்டர்.…

வணிக உரிமம் ரத்து செய்வது தொடர்பாக மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜு தலைமையில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்த வியாபாரிகள்:-

திருச்சி எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பைப் ட்ரேடர்ஸ் வெல்பர் அசோசியேசன் சார்பாக புதிதாக வணிக உரிமம் என்ற புது வரிச் சுமையை சுமத்துவதை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் திருச்சி மாநகராட்சி…

திருச்சியில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டைகளை பகுதி செயலாளரிடம் வழங்கிய மாவட்ட செயலாளர் சீனிவாசன்:-

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இன்று நடந்தது . இந்த ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினர் அடையாள அட்டைகள் அந்தந்த பகுதி செயலாளர்களிடம் வழங்கப்ப்பட்டது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைப்புச் செயலாளர்…

தனியார் இடத்தில் பதாகை வைத்து பணம் கேட்டு மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உரிமையாளர் எஸ்பியிடம் புகார்:-

திருச்சி பொன்மலைபட்டி வடக்குத் தெருவை சேர்ந்த டென்சிங் பெர்னாட் என்பவர் இன்று காலை திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- திருச்சி மாவட்டம்…

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை ,வெள்ளி மற்றும் பணம் திருட்டு – போலீசார் விசாரணை:-.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காந்திநகரில் வசித்து வருபவர் ஜலாலுதீன் (52). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தாஹிராபானு(48) இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள் என்ற ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் ஒரு மகன் திண்டுக்கல் பகுதியில் தங்கி…

பொய் வழக்கு போட்டு எதிர்க் கட்சிகளை திமுக அரசு முடக்க பார்க்கிறது – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு:-

ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சித்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இன்று முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் சந்தித்தனர். அருகில்…

திருச்சியில் வகுப்பு ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன் – ஸ்ரீரங்கத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்:-

ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது இந்த மோதலை தடுப்பதற்காக வகுப்பு ஆசிரியரான சிவக்குமார் என்பவர் மாணவர்களை சமரசம் செய்ய முற்பட்டார் அப்போது மோதலில் ஈடுபட்ட…

அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு MTC முத்து டியூஷன் சென்டர் சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது:-

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள MTC முத்து டியூஷன் சென்டர் மற்றும் மாற்றம் அறக்கட்டளை இணைந்து மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மரக்கன்று கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது ..…

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் தமிழ்நாடு கண்ணகி குல செட்டியார்கள் பேரவையின் அரசியல் பிரகடன 2வது மாநில பொதுச் குழு கூட்டத்தில் தீர்மானம்:-

தமிழ்நாடு கண்ணகி குல செட்டியார்கள் பேரவை மற்றும் அனைத்து செட்டியார்களின் அரசியல் சமூக பாதுகாப்பு இயக்கம் இணைந்து புகார் நகரத்து பெரு வணிக செட்டியார்கள் ஐம்பெருங்குழு வணிக கூடல் வாழ்வுரிமை அரசியல் பிரகடன இரண்டாவது மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய…

தர்ம இயக்கம் சார்பாக சோழ தேசத்தில் விதை திருவிழா திருச்சியில் நடைபெற்றது:-

தர்ம இயக்கம் சார்பாக அக்னி அறக்கட்டளை, கிரியா அறக்கட்டளை பசுமை சிகரம் அறக்கட்டளை இணைந்து சோழ தேசத்தில் விதை திருவிழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சி திண்ண கோணம் பசுமை சிகரம் அறக்கட்டளை நிறுவனர் யோகநாதன் தலைமை வகித்தார். குத்தூசி திரைப்பட இயக்குனர்…

திருச்சி புனித தூய வளனார் கல்லூரியில் 40 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சந்திப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது.

திருச்சி புனித தூய வளனார் கல்லூரியில் கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை இந்த கல்லூரியில் பொருளாதாரம் கணிதம் வேதியல் போன்ற படிப்புகள் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை…