Month: October 2024

புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடிய திருச்சி மக்கள்.

உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடபட்டு வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தீபாவளியையொட்டி தமிழக கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில்…

சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பக் குளத்தில் மிதந்த இரண்டு அடையாளம் தெரியாத சடலங்கள் – போலீசார் விசாரணை:-

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உலக புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள அருள்மிகு…

முத்து ராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழா – தேவர் சிலைக்கு அமைச்சர் K.N.நேரு மாலை அணிவித்து மரியாதை:-

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழா மற்றும் 62 வது குருபூஜை விழாவை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு தமிழகம் முழுவதிலும் உள்ள அவரது திரு உருவச்சிலைகளுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்…

திருச்சி தமிழன் டிவி கேமராமேன் விவேக் காலமானார்:-

திருச்சி மன்னார்புரம் செங்குளம் காலனி பகுதியில் வசித்து வருபவர் விக்னேஸ்வரன் என்கிற விவேக் தமிழன் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்…

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஸ்ரீரங்கத்தில் புதிய கட்டிடத்தை முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்:-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 426 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3268 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக்…

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழா – ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு:-

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 39 வது பட்டமளிப்பு விழா இன்று பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பல்கலைக்கழகத்தில் பயின்றுள்ள இளங்கலை முதுகலை ஆராய்ச்சி படிப்புகள் என மொத்தம் 520 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி…

திருச்சி அரசு போக்கு வரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு நாள் உறுதிமொழி ஏற்பு:-

அக்டோபர் மாதம் 28ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு வாரமாக அனுசரிக்கப்படுவதையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிட்) திருச்சிராப்பள்ளி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில்…

“தீபாவளி” பண்டிகையை முன்னிட்டு, திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையத்தை போலீஸ் கமிஷ்னர் காமினி கொடியசைத்து துவக்கி வைத்தார்:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், பயணிகளின் நலன் கருதியும் திருச்சி மாநகரில் 28.10.2024ம்தேதி முதல் 04.11.2024ம்தேதி வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் கீழ்கண்ட தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப் படவுள்ளது.…

ராணுவத்திற்கு இணையான தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் – துணை இராணுவ படையினர் கோரிக்கை:-

திருச்சியில் தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல் படை நல சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது முன்னாள் மத்திய ஆயுத காவல் படை நல மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் முதலாம் ஆண்டு மாவட்ட செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் சங்கத்தின்…

திருச்சியில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய காட்டாற்று வெள்ளத்தில் எடுத்துச் சென்ற பரிதாபம்:-

திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றியம் மருதூர் ஊராட்சிக்கு உட்பட்டது நேரு நகர் இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு அப்பகுதியில் மயானம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அவர்கள் இறந்தவர்களின் உடலை புதைத்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்கள் பல…

வருவாய்த் துறையில் உள்ள 40% காலி பணியிடங்களில் உடனே நிரப்ப வேண்டும் – வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் பேட்டி:-

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாநில அமைப்பு நிலை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய்த் துறையில் உள்ள கடுமையான…

பதவி உயர்வு வழங்க வேண்டும் – தமிழ்நாடு வன அலுவலக சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்:-

தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 500க்கும்…

திருச்சி பஞ்சப்பூர் புதிய முனையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும் – மேயரிடம் அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தல்:-

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் வகித்தனர் . இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் பாலு நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத்…

திருச்சி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தற்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை ஈடுபட்டுள்ளனர். தீபாவளி நெருங்கி வருவதை ஒட்டி…

திருச்சி பாலக்கரை பகுதி அதிமுக சார்பில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன், பாசறை செயலாளர் பரமசிவம் பங்கேற்பு:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர், மாவட்டம் பாலக்கரை பகுதி சார்பில் அதிமுக கழகத்தின் வளர்ச்சி பணிகள் குறித்தும், மக்கள் பணிகள் குறித்தும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநகர், மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக…