இந்திய மக்கள் வாழ மோடி அரசு வீழ என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தியாவின் அனைத்து ஆளுநர் மாளிகை முன்பாக 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம் வருகிற நவம்பர் 26 27 28தேதிகளில் இரவு பகலாக அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற உள்ளது.
மேலும் தலைநகர் சென்னையில் நடைபெறும் போராட்டத்தை மக்கள் மத்தியில் விளக்கும் தெருமுனை பிரச்சாரம் கடந்த நவம்பர் 18ம் தேதி துவங்கி 22 வரை திருச்சி மாவட்டத்தில் நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக உறையூரில் துவங்கிய தெருமுனை பிரசாரக் கூட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார் .தொமுச செயலாளர் குணசேகரன், எத்திராஜ், ரவீந்திரன் ஏஐடியுசி சார்பில் நடராஜன், முருகன் ,செல்வகுமார் சிஐடியு சார்பில் ரங்கராஜன், சீனிவாசன் ஐ என் டி யுசி சார்பில் ஆறுமுகம் ஏ ஐ சி சிடியு சார்பில் ஞான தேசிகன் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிவசூரியன், ரவிக்குமார் ,செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் உறையூர் குறத்தெரு ,பீமநகர், ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார கூட்டம் நடைபெற்ற இறுதியாக அஞ்சுகம் நன்றி கூறினார்.