நாகப்பட்டினம் மாவட்டம் சன்னாசி பனங்குடி தாளரண்யேசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான சாமி சிலைகளான ஆடிப்பூர அம்மன் மற்றும் விநாயகர் சிலைகள் திருட்டு வழக்கில் 29 ஆண்டுகளுக்குப் பின் கண்டு பிடிக்கப்பட்டது குறித்து தமிழக காவல் துறை இயக்குநர் முனைவர் சைலேந்திர பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

 கடந்த 1992 – ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் , திட்டச்சேரி அருகில் சன்னியாசி பனங்குடி கிராமத்திலுள்ள அருள்மிகு . தாளரணேசுவரர் திருக்கோயிலில் ஆடிப்பூர அம்மன் உலோக சிலை -1 , வெண்கல குடம் -1 , மணி -1 , நாகாபரணம் -1 , செம்பு கலசம் -2 உள்ளிட்ட பொருட்கள் களவு போனது . தொடர்பாக திட்டச்சேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு , 1993 – ம் ஆண்டு கண்டுபிடிக்க முடியாத வழக்காக முடிக்கப்பட்டது . இந்நிலையில் 2017 – ம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவின்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்த அனைத்து சிலைத் திருட்டு வழக்குகளும் ( கண்டுபிடிக்க , முடியாத வழக்குகள் உட்பட ) சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது . அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட போது சில வழக்கு கோப்புகள் மாயமாகி போனதாக புகார் எழுந்தது . அந்த வகையில் நாகப்பட்டிணம் மாவட்டம் திட்டச்சேரி காவல் நிலைய வழக்கு கோப்பு எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால் சிலை திருட்டு தடுப்பு பிரிவில் கோயில் அர்ச்சகரிடம் புதிதாக புகார் பெற்று புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது .

அதன்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் தலைமையில் காவல் ஆய்வாளர் இந்திரா மற்றும் சார்பு ஆய்வாளர்கள் தமிழ்செல்வன் பாலச்சந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தற்போது 29 ஆண்டுகளுக்கு முன் சன்னியாசி பனங்குடி தாளரணேசுவரர் கோயிலில் களவு போன ஆடிப்பூர அம்மன் உலோகச் சிலை . மற்றும் அந்த கோயில் வழிபாட்டில் இருந்த விநாயகர் உலோகச் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கைப்பற்றப்பட்டுள்ளது .

 மேலும் சமீபத்தில் 16.10.2021 – ம் தேதியில் சுமார் 110 கோடிக்கு விற்க முயன்ற தொன்மையான சிலைகள் 1. எட்டு கை விஷ்ணு 2. சிவன் 3. எட்டு கை விஷ்ணு 4. விநாயகர் 5. நடராஜர் சிலை ஆகியவை சிலை திருட்டு தடுப்புப் போலீசாரால் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு 2 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . மேலும் 17.10.2021 தேதியில் மேல்மருவத்தூரில் I. மீனாட்சியம்மன் சிலை . 2. ரிஷப தேவர் மற்றும் 3. கிருஷ்ணர் உலோக சிலைகள் ஒரு கோடிக்கு விற்க முயன்றது கண்டுப்பிடிக்கப்பட்டு குற்றவாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும் கடந்த 16.12.2021 – ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பந்திநலினம் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான தொன்மையான சுமார் ஒரு கோடிக்கு மேல் மதிப்புடைய சண்டிகேஸ்வரர் சாமி சிலை கீழ்மனக்குடி விஸ்வநாதஸ்வாமி கோவிலுக்கு சேர்ந்த சிலை என பதிவு செய்யப்பட்டு இருந்து வருவது கண்டுப்பிடிக்கப்பட்டு கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது . மேலும் 17 சிலை திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 39 சிலைகள் வெவ்வேறு அருங்காட்சியகம் வெளிநாட்டு மற்றும் கலைக்கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை MLAT ( Mutual Legal Assistance Treaty ) மற்றும் LR ( Letter of request ) மூலம் மீட்கும் நடடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. என தெரிவித்தார் .

 

Leave a Reply

Your email address will not be published.