திருச்சி காந்தி மார்க்கெட் மணி மண்டப சாலை பகுதியில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இளம் கன்று ஒன்று காலில் அடிப்பட்ட காயத்துடன் இரத்தம் வழிந்தபடி நடக்க முடியாமல் சாலையின் நடுவில் படத்து கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் கொடுத்த கடந்த 3- மணி நேரமாக மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வரவில்லை. மேலும் அடிபட்ட ரத்தத்துடன் வலியால் துடித்த இளங்கன்றுக்கு அப்பகுதியில் காய்கறி விற்று கொண்டு இருந்த மூதாட்டி ஒருவர் மஞ்சள் தூளை அடிப்பட்ட இடத்தில் போட்டுவிட்டார். தற்போது வரை இளம் கன்று சாலையில் அடிப்பட்ட காயத்துடன் படுத்துக் கிடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்