இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க ஒன்றிய அரசின் 3−வேளாண் சட்ட விரோதங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த பல மாதங்களாக உறை பனியிலும், கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் வீதியிலேயே உண்டு, உறங்கி உலகமே வியக்கும் வகையில் கடந்த 8−மாத காலத்திற்க்கும்”மேலாக டெல்லியில் தொடா்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக

திருச்சி மாவட்ட விவசாயிகள் மாவட்ட செயலாளா் அயிலை சிவ சூாியன் தலைமையில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் இருந்து விவசாயிகள் டெல்லி சென்று போராட உள்ளனர். அதற்காக இன்று காலை 9−மணிக்கு வைகை விரைவு ரயில் வண்டியில் புறப்பட்டு சென்றனர். முன்னதாக ரயில் நிலையம் முன்பு விவசாயிகள் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்,தொழிற்சங்க நிா்வாகிகள் வாழ்த்தி வழியனுப்பினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்