திருச்சி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பணிகளுக்கான நேர்முகத் தேர்வு திருச்சி கி ஆ பெ மருத்துவ கல்லூரி வளாகத்தில் இன்று நடந்தது. இதில் ரேடியோகிராபர்-8, லேப் டெக்னீசியன்-10, டயாலிசிஸ்-8 மற்றும் சிடி ஸ்கேன் -10 என மொத்தம் 36 மருத்துவ பணிகளுக்கான டெக்னீசியன்களின் நேர்முகத் தேர்வு இன்று நடந்தது.

இந்த நேர்முகத் தேர்வை திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முதல்வர் வனிதா மற்றும் மருத்துவ கல்லூரியின் துணை முதல்வர் ஹரிஷா பேகம் ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில் திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து டிப்ளமோ மற்றும் லேப் டெக்னீசியன் முடித்த ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்கள் சான்றிதழ்களை வழங்கினார். இதேபோல நாளையும் ரேடியோகிராபி, லேப் டெக்னீசியன், டயாலிசிஸ் மற்றும் லேப் டெக்னீசியன் நேர்முகத் தேர்வு நாளையும் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.