பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் 28 பணியாளர்களை எஸ். கே .எம் நிர்வாகம் ஆட்குறைப்பு நடவடிக்கையாக பணி நீக்கம் செய்ததை திரும்ப பெற வலியுறுத்தி அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடர்ந்து ஒட்டுமொத்த தொழிலாளர்களும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏஐடியுசி தலைமையிலான சுங்க சாவடி பணியாளர் சங்கம் திருமாந்துறை கிளையின் தலைவர் மணிகண்டன் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் நீலகிரி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் அனைத்துக் கட்சிகளின் மாநில தலைவர்களும் ஆதரவாக அறிக்கை விடுத்து வருகின்றனர்.

திருச்சி மாவட்ட ஏஐடியுசி நிர்வாகிகளும் அக்டோபர் 4ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் திருமாந்துறை சுங்கச்சாவடி நடைபெறும் போராட்டக் களத்திற்கு நேரில் சென்று திருச்சி மாவட்ட பொதுச் செயலாளரும் தமிழ்நாடு ஏஐடியுசி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ் போராடும் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றி தொழிலாளர் துறையும் நிர்வாகமும் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக பணியில் அமர்த்தி போராட்டத்தை முடிவு கொண்டு வர வேண்டும் என்று உரையாற்றினார். மாவட்ட தலைவர் நடராஜா மற்றும் சமயபுரம் டோல் பிளாசா தொழிற்சங்கத்தின் தலைவர் பிரபாகரன் செயலாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *