தமிழ்நாடு வருவாய்துறை குரூப்-ll நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமுல் படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளாக. சிபிஎஸ் ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்த கோரியும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அகவிலைப்படி உயர்வு நிலுவையை வழங்ககோரியும், உச்சநீதிமன்றத்தின் 12 3 2019 ஆம் ஆண்டு தீர்ப்பின்படி துணை வட்டாட்சியர் பட்டியல்கள் மறுவரை செய்து அதன் அடிப்படையில் திருத்திய வட்டாட்சியர் துணை வட்டாட்சியர் பட்டியல் வெளியிட கோரியும்,
அனைத்து மாவட்டங்களிலும் தகுதியான நபர்களுக்கு துணை வட்டாட்சியர் தற்காலிக பதவி உயர்வு பட்டியலை வெளியிட கோரியும், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் ஒரு துணை வட்டாட்சியர் பணியிடமும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு பணியிடமும் புதிதாக உருவாக்க கோரியும், நேரடி நியமன உதவியாளருக்கு அமைச்சுப் பணி சிறப்பு விதி 38 இன் படி வருவாய் ஆய்வாளர் பயிற்சி உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளையும் ஐந்தாண்டுகளுக்குள் முறையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.