தமிழ்நாடு அரசு சாதி பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 138 வது பிரிவில் இருக்கும் வீரபத்திரர் ராஜகுல பேரவை கடந்த 75 ஆண்டு காலமாக பற்பல போராட்டங்களை நடத்தியுள்ளது. அந்த வகையில் எம் பி சி பட்டியலில் ஐந்து சதவீத இட பங்கீடு மற்றும் ராஜ குலத்தோர் பெயர் மாற்ற வேண்டி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வீரபத்திர ராஜகுல பேரவை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு வீரபத்திரர் ராஜகுல பேரவையின் நிறுவனத் தலைவர் வசந்தன் தலைமை தாங்கினார. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
