தமிழகத்தில் 7-வது கட்டமாக இன்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி தில்லைநகர் கி ஆ பெ விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினைத் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு இன்று தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர்

சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, முன்னாள் துணை மேயர் அன்பழகன், மாவட்டப் பிரமுகர் வைரமணி மற்றும் பலர் உள்ளனர். இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 69 சதவீதம் பேர். 2-வது தவணை தடுப்பூசியை 29 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். தற்போது 44 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *