நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள 744 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நேரு யுவ கேந்திரா, நாட்டு நலப்பணித் திட்டம், மாநில விளையாட்டு ஆணையத்தின் மூலமாக சுதந்திர தின ஓட்டத்தை 13.08.2021 முதல் 02.10.2021 வரை நடத்தி வருகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 02.10.2021 அன்று இந்திய 75 வது ஆண்டு சுதந்திர தின ஓட்டம் ( Fit India Freedom Run 2.0 ) நேரு யுவ கேந்திரா, நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தமிழ்நாடு ஆகியோருடன் இணைந்து, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சமூக இடைவெளியினை பின்பற்றி அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு நடத்தப்பட்டது.

ஆரோக்கியமான, தன்னம்பிக்கை உள்ள சமூகத்தை உருவாக்க, அனைவரும் தினமும் 30 நிமிட உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்கிட தங்கள் வாழ்வில் தீர்மானம் மேற்கொள்ளலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக காலை 07.00 மணி அளவில் சுதந்திர தின ஓட்டத்தை திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பழைய தபால் நிலையத்திற்கு முன்பாக அமைந்து இருக்கும் உப்புசத்தியாகிரக நினைவு தூணிற்கு முன்பாக தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமை தாங்கினார்கள். விழாவில்

திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பாரதிதாசன் பல்கலைகழக துணை வேந்தர் முனைவர்.செல்வம், பல்கலைகழக பதிவாளர் முனைவர் கோபிநாத், நாட்டு நலப்பணித் திட்ட நிகழ்ச்சி அலுவலர் முனைவர் லட்சுமிபிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

75 வது சுதந்திர தின ஓட்டம் ரயில்வே ஜங்சன் ரவுண்டான, ரயில்வே மேம்பாலம். மன்னார்புரம் ரவுண்டான, ஆட்சித்தலைவர் முகாம் அலுவலக சாலை வழியாக அண்ணா விளையாட்டு அரங்கத்தை சென்றடைத்து. இதில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் செல்வி.சுருதி அனைவரையும் வரவேற்றார்கள். நிறைவாக மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரபு நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை மாவட்ட நேரு யுவ கேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பாரதிதாசன் பல்கலைகழக நாட்டு நலப்பணி திட்டம் ஆகியோர் செய்து இருந்தார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *