திருச்சி அசால்ட் ரைபிள் ( TAR ) – கீழ் மடிப்பு பட் புதிய வடிவமைப்பு துப்பாக்கியானது 75 வது சுதந்திர தின நினைவாக அறிமுகப்படுத்தப்பட்டது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள படைகலன் தொழிற்சாலையில்நிலையான பட் ( Fixed Butt ) மற்றும் பக்க மடிப்பு பட் ( Side Folding Butt ) ஆகிய இரண்டு வகைகளில் திருச்சி அசால்ட் ரைபிள் ( TAR ) தயாரித்து வருகிறது .

7.62×39 மிமீ திருச்சி அசால்ட் ரைபிள் ( TAR ) ஒரு சக்திவாய்ந்த தனிப்பட்ட தானியங்கி ஆயுதம் ஆகும் . சிஏபிஎஃப் பிரிவுகள் , மாநில காவல்துறை மற்றும் ஆர்பிஎஃப் காவலர் மற்றும் ரோந்து பணியில் உள்ள வீரர்களின் விரைவான மற்றும் எளிமையான இயக்கத்திற்கு டவுன் மடிப்பு பட் பதிப்பு ( Down Folding Butt ) தேவைப்படுவதால் படைக்கல தொழிற்சாலையில் திருச்சி அசால்ட் ரைபிள் கீழ் மடிப்பு பட் ( Down Folding Butt ) பதிப்பை தயாரித்துள்ளது . கீழ் மடிப்பு பட்டின் ஒட்டுமொத்த நீளம் பட் திறந்த ( Open butt) நிலையில் 900 மிமீ மற்றும் பட் மடிப்பு ( folded Butt ) நிலையில் 650 மிமீ ஆகும் .இத்தனை சிறப்பு வாய்ந்த துப்பாக்கி வகையை பொது மேலாளர் , சஞ்சய் திவேதி , கூடுதல் கூடுதல் பொது மேலாளர் ராஜிவ் ஜெயின் , உள்ளிட்ட அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர் .

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *