சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திரதினவிழா கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது, இதனிடையே நாட்டுப்பற்றை ஏற்படுத்துவதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவேண்டும் என்று 75வது சுதந்திர தினத்தையொட்டி சுவாமி விவேகானந்தா சார்பில் மாரத்தான் ஓட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.
தென்னூர் உழவர்சந்தையிலிருந்து தொடங்கி நீதிமன்றம், கண்டோன்மென்ட், தபால்நிலையம், டிவிஎஸ் டோல்கேட் வரையிலான 5கிமீ மாரத்தான் ஓட்டத்தில் ஆண்கள், பெண்கள் என 1200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக இந்த மாராத்தான் ஓட்டத்தினை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணைஆணையர் அருண் கொடியசைத்து துவக்கிவைத்தனர். இதில் பங்கேற்ற திரளான ஆண்கள் மற்றும் பெண்கள் கையில் தேசியக்கொடியினை ஏந்தியபடி மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று ஓடினர்.
பின்னர் அண்ணா விளையாட்டு அரங்கம் மைதானத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டத்தில் முதல் 3இடங்களைப் பிடிக்கும் வீரர், வீராங்கணைகளுக்கு தனித்தனியே 15ஆயிரம், 10ஆயிரம், 5ஆயிரம் என பரிசுத்தொகையை வழங்கி வாழ்த்தினார்.