77 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் நமது இந்திய தேசிய கொடியை அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் வீடுகள் பொது இடங்கள் ஆகியவற்றில் தேசப்பற்றுடன் ஏற்றி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் மண்டலம் 5 வார்டு குழு அலுவலகத்தில் இன்று காலை மூவர்ண இந்திய தேசிய கொடியை மண்டலம் 5 கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார். இந்நிகழ்வின் போது மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதேபோல் திருச்சி மாநகராட்சி பொன்மலை மண்டலம் 4 வார்டு குழு அலுவலக வளாகத்தில் மூவர்ண இந்திய தேசியக் கொடியை மண்டல நாலு கோட்டத் தலைவர் துர்கா தேவி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்
அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கினார் இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.