திருச்சிமாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் மற்றும் களப்பணிகள் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு மேற்பார்வையாளர் மற்றும் சிறு ,குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சிறப்பு அரசு செயலர் மகேஸ்வரி முன்னிலையில், மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில், இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.