தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் 96-வது மாநில அளவிலான 19 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான தடகள போட்டிகள் கடந்த ஜூன் 7ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டிகளில் ஹாமர் த்ரோ, போல் வால்ட், நீண்ட தொலைவு நடை மற்றும் 1200 மீட்டர் தூர ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

 இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு திருச்சி மாவட்ட தடகள சங்கத் தலைவர் மயில்வாகனன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் மற்றும் ஓவர் ஆள் சாம்பியன்ஷிப் கோப்பைகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுக முன்னாள் சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிவிபி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில்

போல் வால்ட் போட்டியில் தங்கம் வென்ற வீரர் யுகேந்திரன், மற்றும் 1500 மீட்டர் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற வீராங்கனை நவநீதா மற்றும் 1200 மீட்டர் ரிலே போட்டியில் பங்கேற்ற வீர வீராங்கனைகள் மற்றும் பல்வேறு போட்டிகளில்

தங்கம் வெள்ளி வெண்கலம் மற்றும் ஆண்கள் பிரிவில் ஓவர் ஆள் வின்னர் இதே போல் பெண்கள் பிரிவில் ஓவர் ஆள் வின்னர் மற்றும் மாநில அளவிலான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற சிவிபி ஸ்போர்ட்ஸ் அகடாமியின் வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *