தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு பல்வேறு கட்சிகள், சமூகநல அமைப்புகள் சார்பில் காலை, மாலை, இரவு என உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.