உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் நோன்பை வைத்து பல்வேறு மதநல்லிணக்க நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்,
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் மாலை விநியோகிக்கப்படும் நோன்புக் கஞ்சியை அனைத்து மதத்தினரும் வாங்கி அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல் பல்வேறு அரசியல் கட்சிகளும் மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்வுகளை நடத்துவது, மதம் பார்க்காமல் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது என இம்மாதம் முழுவதும் நடைபெறுக் கொண்டிருக்கும்.
அதன் ஒரு பகுதியாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஒற்றுமையை எடுத்துக்கூறும் விதமாக திருச்சி எஸ்டிபிஐ கட்சி அரியமங்கலம் கிளையின் சார்பாக சமூக மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு மாவட்ட தலைவர் முபாரக் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளர் அப்சல் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் அனைத்து மதத்தினரும், அனைத்து அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்