திருச்சி சோமரசம்பேட்டை பஞ்சாயத்து சார்பில் கிராமசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். பஞ்சாயத்து சார்பாக நடைபெற்ற பணிகளை மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும் மக்களிடம் பஞ்சாயத்து சார்பாக செய்ய வேண்டிய பணிகள் ஏதேனும் உள்ளதா எனக் கேட்டறிந்து உடனடியாக அதற்கு தீர்வுக்கான வழி செய்யப்பட்டது. நடைபெற்ற கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் குணவதி துரைப்பாண்டியன் தலைமை வகித்தார்.
கிராம சபை கூட்டத்தில் அரசு அதிகாரிகள் , பஞ்சாயத்து அலுவலர்கள் சுற்றியுள்ள பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பஞ்சாயத்தில் பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களை தெரிந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல் திருச்சி அல்லித்துறை பஞ்சாயத்து சார்பில் கிராமசபை கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுமக்கள் கோரிக்கைகளை பதிவேட்டில் பதிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க பஞ்சாயத்து தலைவர் சரவணன் அவர்களால் பரிந்துறை செய்யப்பட்டது.
நடைபெற்ற கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் சரவணன் தலைமை வகித்தார். கிராம சபை கூட்டத்தில் அரசு அதிகாரிகள் , பஞ்சாயத்து அலுவலர்கள் சுற்றியுள்ள பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பஞ்சாயத்தில் பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களை தெரிந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கம்பரசம்பேட்டை பஞ்சாயத்து கிராம சபை கூட்டம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்தபடி நகர்ப்புற அமைச்சர் வழிகாட்டுதலின் பெயரில் நடைபெற்றது. கூட்டத்தில் கம்பரசம்பேட்டை பஞ்சாயத்து உட்பட்ட மக்கள் கலந்துகொண்டு பஞ்சாயத்து நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் பற்றி அறிந்து கொண்டனர் அரசு சார்பாக கிடைக்கப்பெறும் திட்டங்களை விளக்கமாகக் கூறி பஞ்சாயத்து தலைவர் அவர்களிடம் இந்தத் திட்டங்களை அணுகி பயனடையுமாறு தெரிவித்தனர்.
இதனைப்பற்றி புஷ்பவள்ளி ரவிச்சந்திரன் கூறும்பொழுது ஓராண்டு காலத்திற்குள் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து திட்டங்களும் வசதிகளும் நான் செய்து கொடுத்துள்ளேன் மேலும் தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க நகர்ப்புற அமைச்சர் கே என் நேரு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மக்களுக்கு மேலும் பல திட்டங்களை பயனடைய செய்வேன் என்று தெரிவித்தார்.
முன்னாள் கம்பரசம்பேட்டை பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில் தற்போது வரை நான் பதவியேற்றதிலிருந்து இதுநாள் வரை மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் வருகிறேன் தற்பொழுது புஷ்பவள்ளி அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து ஒரு வருடத்தில் காலத்திற்குள் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிட வசதி சாலைவசதி குடிநீர் போன்றவைகளை செய்து மக்கள் தேவையை பூர்த்தி செய்து கொடுத்துள்ளோம் தொடர்ச்சியாக பஞ்சாயத்து வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறோம் எப்போது வேண்டுமானாலும் பொது மக்கள் எங்களை அணுகி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெற்றுக் கொள்ளலாம் வேண்டும் என தெரிவித்தார் மக்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் எப்போதும் சோர்வடைய மாட்டோம் என்று தெரிவித்தார்.இந்நிகழ்வில் ஜானகி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி ஒன்றியம், கணபதி சுப்பிரமணியன் உதவி இயக்குனர் கால்நடை பராமரிப்பு, அருண் பிரியா கிராம நிர்வாக அலுவலர் திரு முருகன் வாழ்ந்து காட்டுவோம் அலுவலர் செல்லக்கண்ணு அங்கன்வாடி பணியாளர் மகாலட்சுமி கூட்டுறவுத்துறை மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இளைஞர் குழுவினர் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்