இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல், வேளாண் உட்பொருட்கள் செயல்தளமான பிக்ஹாட் தமிழ் மொழியில் ஒரு மொபைல் செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. தரவுகள், தொழில்நுட்பம் மற்றும் பயிர் அறிவியல் ஆகியவற்றை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்கி இப்பிராந்தியத்திலுள்ள விவசாயப் பெருமக்கள் திறனதிகாரம் பெறச் செய்வதே இச்செயலி அறிமுகத்தின் நோக்கமாகும். பருவநிலை சார்ந்த கடும் சவால்கள் இருந்தபோதிலும்கூட காவேரி டெல்டா மண்டலத்தின்கீழ் வரும் திருச்சி வட்டார விவசாயிகள், விவசாயத்தைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். திருச்சி பிராந்தியத்தில் ஏறக்குறைய 70 சதவிகித மக்கள் விவசாயத்தையும் மற்றும் அதனோடு தொடர்புடைய செயல்பாடுகளையுமே அவர்களது வாழ்வாதாரத்திற்காக சார்ந்திருக்கின்றனர். நெல், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், வாழை, கரும்பு மற்றும் பருத்தி ஆகியவை இங்கு சாகுபடி செய்யப்படும் முக்கிய பயிர்களாகும்.

பிக்ஹாட் நிறுவனத்தின் இணை-நிறுவனரும், இயக்குனருமான சச்சின் நந்வானா இதுபற்றி கூறியதாவது: “சரியான, விவேகமான முடிவை விவசாயிகள் எடுப்பதற்கு உதவுவதற்காகவே பிக்ஹாட் செயலி (ஆப்) உருவாக்கப்பட்டிருக்கிறது. இச்செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் அறுவடைக்கு முந்தைய நிலையிலிருந்து, அறுவடைக்கு பிந்தைய நிலை வரை சாகுபடி செய்யும் தங்களது பயிர்களுக்கான தேவைகளை விவசாயிகளால் பூர்த்தி செய்ய முடியும். பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைக்கவும், விளைச்சலையும் மற்றும் பயிரின் தரத்தையும் அதிகரிக்கவும் தரமான ஆலோசனைக் குறிப்புகளை இச்செயலி உரிய நேரத்திற்குள் வழங்கும். பயிரின் சாகுபடி காலம் முழுவதிலும் விவசாயிக்கு அவருக்கெனவே பிரத்யேகமான ஆலோசனைகளை இச்செயலி வழங்கும் என்பது இதன் தனிச்சிறப்பாகும். தங்களது சொந்த தாய்மொழியான தமிழில் இதன் வாசகங்களை விவசாயிகள் எளிதாக வாசிக்கவும், தங்களது அறிவை இன்னும் செழுமையாக்கிக் கொள்ளவும் முடியும்,” என்று கூறினார்.

புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் செயலர் ராஜாராம் பேசுகையில், “ஒவ்வொரு விவசாயியின் நலனுக்காகவும் விவசாயம் குறித்த தகவலை உலகளவில் பரப்ப இந்த செயலி உதவும். தமிழில் இருப்பதால், முடிவுகள் பன்மடங்கு இருக்கும்” என்றார்.தாங்கள் கொண்டிருக்கும் அறிவையும், பெறுகின்ற தகவலையும் பலரும் பயன்படுத்துமாறு தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளவும் மற்றும் கலந்துரையாடவும் “விவசாயிகள் சமூகத்தின் செயல்தளமாகவும்” இச்செயலியைப் பயன்படுத்தலாம். பயனர் முகப்பு பக்கம் மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது; சாகுபடி செய்யப்படும் பரப்பளவு, புவிசார்ந்த அமைவிடம் மற்றும் மண்ணின் வகை ஆகியவற்றின் அடிப்படையில் என்னென்ன பயிர்களை எப்போது, எப்படி பயிரிடுவது என்று விவசாயிகளுக்கு அறிவியல் ரீதியிலான தகவல்களைப் பெறுவதற்கு இது உதவுகிறது. வேளாண்மையில் ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்பை தணிப்பதற்கு செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் ஒரு நிகழ்நேர தீர்வை வழங்கும் இச்செயலி, தமிழ் மொழியிலேயே பயிர்களுக்கு விதைப்பு முதல், அறுவடை வரை முழுமையான ஆலோசனைக் குறிப்புகளை வழங்கும். பரிவர்த்தனை மற்றும் நடத்தை சார்ந்த தரவைச் சார்ந்து வேளாண் உற்பத்திப் பொருட்கள் மீதான பரிந்துரைப்புகளையும், பரிந்துரைகளையும் வழங்குவதால் இச்செயலி விவசாயிகளின் உற்ற தோழனாக விளங்கும் என்பது நிச்சயம். சச்சின் நந்வானா இதுபற்றி மேலும் பேசுகையில், “உணவு தானிய உற்பத்தி அம்சத்தைப் பொறுத்தவரை அதிகபட்ச அளவை தமிழ்நாடு மாநிலம் எட்டிவிட்டது என்று ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டும் நிலையில். விளைச்சலையும், உற்பத்தித் திறனையும் மேம்படுத்துவதற்கு இன்னும் சாத்தியமிருக்கிறது என்று வேளாண் அறிவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்விஷயத்தில் பிராந்தியத்திலுள்ள விவசாயப் பெருமக்களுக்கு நல்ல தீர்வுகளை வழங்க நவீன தொழில்நுட்பத்தையும், துல்லியமான தரவுகளையும் கொண்டிருக்கும் பிக்ஹாட் நிறுவனத்தால் உதவமுடியும்.” என்று கூறினார். மேலும் விவசாயிகள் 180-2000-2434 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் அல்லது www.BigHaat.com வலைதளத்தில் தேவையான தகவலைப் பெறலாம் என தெவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *