திருச்சி மாநகர காவல்துறை சார்பாக ஆயுதப்படை காவலர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது . முன்னதாக திருச்சி மாநகர ஆயுதப்படையில் உள்ள ஆயுத காப்பறை மற்றும் பண்டகம் ஆகியவற்றை ஆய்வு செய்து பொருட்களை மாநகர காவல் துறையினரின் தேவைகள் அறிந்து உடனுக்குடன் வழங்கவேண்டும் என்று அறிவுரை வழங்கினார் .
திருச்சி மாநகரத்தில் காவலர்களின் குறைகளை களைவது தொடர்பாக திருச்சி மாநகர ஆயுதப்படை அலுவலகத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் குறைகளை கேட்டார்கள் . இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் , ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் , காவல் துறையினர் கலந்து கொண்டு பதவி உயர்வு , சம்பள குறைபாடு , வீடு மாற்றம் ஆகியவற்றில் உள்ள குறைகளை தெரிவித்தார்கள் . உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்தார் . இம்முகாமில் திருச்சி மாநகர துணை கமிஷனர் ( தெற்கு சரகம் ) முத்தரசு கலந்து கொண்டார் . இதேபோன்று திருச்சி மாநகர காவல்துறை சார்பாக காவலர்களின் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு திருச்சி மாநகரில் பணிபுரியும் காவல் ஆளினர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்தார் .