மயிலாடுதுறை தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசம் பல்லக்குத் தூக்கும் விழாவிற்கு தமிழக அரசு திடீர் தடை விதித்து உத்தரவிட்டது அனைவரும் அறிந்ததே.இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு தரப்பு பக்தர்களிடம் இருந்தும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு இயக்கங்கள் இடமிருந்தும் எதிர்ப்பு வலுக்கவே அதேவேளையில் சட்டசபையில் அதிமுக பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இதற்கு கேள்வி கேட்கவும் தமிழக அரசு சுமுக தீர்வு இதற்கு எடுக்கப்படும் என்று கூறியதுடன் ஆதீனங்களை அழைத்து பேசி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இப்பிரச்சனை தொடங்கிய காலத்தில் இதுகுறித்து மனம் சஞ்சலம் அடைந்த திண்டுக்கல் ஸ்ரீ சிவபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசர் தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அப்பொழுது திண்டுக்கல் ஆதின மடத்தில் இருந்து திருவெறும்பூரை அடுத்த துவாக்குடி அருகே உள்ள இடர்களை களையக் கூடிய திருநெடுங்களநாதரிடம் பட்டினப்பிரவேசம் விழாவிற்கு சுமூக தீர்வு காண நெடுங்களநாதரிடம் வேண்டி கொண்டார்.தற்பொழுது அதற்கு சுமூக தீர்வு ஏற்பட்டுவிட்டதால் நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று காலை நெடுங்களநாதர் கோவிலுக்கு நேரில் வந்து நெடுங்களநாதருக்கு நன்றி தெரிவித்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் அர்ச்சகர் சிவாச்சாரியார் ரமேஷ் குருக்கள் அருட் பிரசாதம் வழங்கினார்.அப்பொழுது கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் ஆதீனத்திடம் ஆசி பெற்றுச் சென்றனர்.