திருச்சி மாநகரில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயமாக திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு மட்டுவார்குழலி அம்பிகை சமேத தாயுமானவர் சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
மழையின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான தாயுமானவ சுவாமி திருக்கோவிலில் இருந்து சிவபெருமான் மற்றும் அம்பாள் புறப்பட்டு நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்தனர்.
ஆலயத்தின் வரலாற்று சிறப்பு மிக்க திருவிழாவான செட்டி பண்றதுக்கு சிவபெருமான் பிரசவம் பார்த்த விழா ஒன்பதாம் தேதி வெகுவிமர்சையாக நடைபெற்றது – அதன் பின்னர் 10ம் தேதி நூற்றுக்கால் மண்டபத்தில் தருமை ஆதீனத்தின் தலைமையில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
முக்கிய திருவிழாவான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது – காலை 4.30 மணி அளவில் சுவாமி மற்றும் அம்பாள் தேரில் எழுந்தருளினர், அதன் பின்னர் 6.30 மணி அளவில் தாயுமானவா .. ஓம் நமச்சிவாயா…. சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி என்கிற மந்திரங்கள் முழங்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் தாயுமானவர்சுவாமி தேரையும் … மட்டுவார்குழலி அம்மன் தேரைதும் வடம் பிடித்து இழுத்தனர். மலைக் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் நீர் மோர் பானக்கம் மற்றும் அன்னதானம் பக்தர்களால் வழங்கப்பட்டது.