திருச்சி ரயில்வே ஜங்ஷன் முதல் பிளாட்பாரத்தில் உள்ள இருப்புப்பாதை காவல் நிலையம் முன்பு வக்கீலை தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும், காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்து 30-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தர்ணா போராட்டம் குறித்து வக்கீல் முருகானந்தம் கூறுகையில்:-
கடந்த 2 நாட்களுக்கு முன்பாக திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்ற ரயிலில் வக்கீல் நடராஜன் என்பவர் பயணம் செய்து உள்ளார். அப்போது இதே ரயிலில் பயணம் செய்த 4 பேர் அவரை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிதத்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஆய்வாளர் மோகனசுந்தரி இரு தரப்பினரையும் இன்று காலை காவல் நிலையம் வரும்படி கூறியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து இரு தரப்பினரும் இன்று காலை இருப்புப்பாதை காவல் நிலையம் வந்தபோது இரு தரப்பினரிடமும் பேசி இருவர் மீதும் தவறு உள்ளது இருவர் மீதும் வழக்கு பதிவு தாகக் கூறி உள்ளார். இந்நிலையில் வாக்கில் நடராஜனுடன் புகார் அளிக்க வந்த வக்கீல்கள் மீதும் வழக்குப்பதிவு தாகக் கூறி வக்கீல்களை காவல் நிலையத்திலிருந்து வெளியே விடாமல் தடுத்து நிறுத்தியதால் வக்கீல்களுக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் அங்கு வந்த வக்கீல்கள் திடீரென காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வக்கீலை தாக்கிய அந்த நான்கு பேர் மீது வழக்குப் பதிய வேண்டும். வக்கீல்களை தரக்குறைவாக பேசிய காவல் நிலைய ஆய்வாளர் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலைய டிஎஸ்பி மகாதேவன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.