திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சிவராசுவிடம் திருநங்கை ஓவியா மேரி என்பவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி திருவெரம்பூர் பாப்பா குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஓவியா மேரி வயது 36 பிஎஸ்சி பட்டதாரியான இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் திருநங்கையாக மாறி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் மீண்டும் தனது மார்பகத்தை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்பதால் கடந்த நான்கு மாதங்களாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என திருச்சி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மார்பக அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை செய்வதற்கு என தனி சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் எனவும் அதேபோல் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசிடம் திருநங்கை ஓவியா மேரி மனு அளித்தார்.