மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் “காக்கிக்கவசங்கள்” என்ற திட்டம் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கொராணாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளை வாரம் தோறும் அக்குழந்தைகள் குடியிருக்கும் எல்லைக்குட்பட்ட காவல்நிலைய பெண் காவலர்கள் நேரில் சென்று சந்தித்து அவர்களிடம் உரையாடி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மண்ணச்சநல்லூர் காவல் நிலைய பெண் காவலர் சந்தியா மண்ணச்சநல்லூர் வட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட ஓமாந்தூர் கிராமத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்டு தாயாரை இழந்த குழந்தைகளை பார்க்க சென்ற போது தனீஷ்கா வயது 6 சிறுமிக்கு பிறந்தநாள் என்பதை அறிந்து அவருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் பரிசு வழங்கி கொண்டாடி அக்குழந்தையை மகிழ்வித்துள்ளார். இதையறிந்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் தாயாரை இழந்த சிறுமிக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் செயல்பட்ட பெண் காவலரை வெகுவாக பாராட்டினார்.