திருச்சி,காந்தி மார்க்கெட் மணிகூண்டு மீன் மார்க்கெட் செல்லும் வழியில் கழிவு நீர் குழாய் உடைந்து மீன் மார்க்கெட் செல்லும் மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகளும் நோய்த் தொற்றும் அபாயமும் ஏற்படுகிறது, வாரத்திற்கு இரண்டு முறை இதுபோன்று அவலநிலை ஏற்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு கழிவுநீர் குழாய் நிரம்பி வழிவது முன்னரே அதை சுத்தப்படுத்துவதற்கு உண்டான நடவடிக்கை எடுக்குமாறும், காந்தி மார்க்கெட்டில் தினந்தோறும் வெளியேற்றப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் இருக்கின்றது,
காந்தி மார்க்கெட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ஏதேனும் ஒரு இடத்தில் குப்பை கொட்டுவதற்கான வண்டி 24 மணி நேரமும் செயல்படுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியும் எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தகர் அணி திருச்சி மாவட்ட தலைவர் அப்துல் மாலிக் அவர்களின் தலைமையில்,வர்த்தகர் அணி மண்டல தலைவர் MAJ.சாதிக் பாஷா முன்னிலையில் இன்று மாவட்ட ஆணையர் முஜிபுர் ரஹ்மான் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் பக்ருதீன், கிழக்கு தொகுதி செயலாளர் வரகனேரி காதர் ,வர்த்தகர் அணி செயலாளர் பிலால்,வர்த்தகர் அணி செயற்குழு உறுப்பினர் அன்பு பாய் ஆகியோர்கள் உடனிருந்தனர்.