திருச்சி தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 35).இவர் அமெரிக்காவில் வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில் திருச்சி செஷன்ஸ் கோர்ட் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பிலிருந்து குடும்பத்தோடு சத்திரம் செல்வதற்காக சத்திரம் செல்லும் பஸ்ஸில் ஏறியுள்ளார். பின்னர் சத்திரம் வந்தவுடன் குடும்பத்தோடு இறங்கி சென்று விட்டார். அப்போது அந்தப் பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநர் டிரைவர் ஆகிய இருவரும் பேருந்தை சுத்தம் செய்வதற்காக பார்த்துள்ளனர். பின்னர் அந்த பேருந்தில் ஒரு மணி பர்ஸ் கடந்துள்ளது. அதை எடுத்துப் பார்த்தபோது உள்ளே ரூ.12 ஆயிரம் பணம் மற்றும் லைசென்ஸ் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளது. அதைத்தொடர்ந்து பணத்தையும் பஸ் டிரைவரும் ஓட்டுநரும் சேர்ந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையில் விசாரணை நடைபெற்றது விசாரணையின்போது கோபிநாத் என்பவரது பொருள் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை வரவழைத்து இன்று காலை ரூ.12 ஆயிரம் பணம் மற்றும் லைசென்ஸ் உள்ளிட்ட பொருட்களை இன்ஸ்பெக்டர் அறிவழகன் உரியவரிடம் ஒப்படைத்தார்.மேலும் இந்த செயலை பாராட்டி பஸ் இயக்குனர் மற்றும் ஓட்டுநருக்கு பாராட்டு வழங்கப்பட்டது.