திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் ஓராண்டு சாதனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.
தேசிய சிறார் நலத்திட்டத்தில் 313 சிறார்களை கண்டறிந்து திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் 285 சிறார்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 55 பேருக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட இருதய அறுவை சிகிச்சையில் 22 பேருக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டும், 18 பேருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் மக்களை தேடி மருத்துவம் முகாம் திட்டத்தில் 3,15,000 நபர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் 60 முகாம்கள் நடத்தப்பட்டு 33,446 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு 11,009 நபர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர். மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. திருச்சியில் ஆறு, வாய்க்கால் தூர்வாரும் பணிகள் 87% நிறைவடைந்துள்ளது. மற்ற 13% இன்னும் 3 தினங்களில் முடிந்து விடும்.ஊசி பாலம் மற்றும் பூச்சு பூசும் பணி இருப்பதால் முக்கொம்பில் உள்ள கொள்ளிடம் புதிய அணை இன்னும் 90-நாட்களில் பயன்பாட்டிற்க்கு வரும் என தெரிவித்தார்.