திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் களுக்கான அவசர குழு கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் இன்று மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் துணை மேயர் திவ்யா மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்தக் கூட்டத்தில் திருச்சி மாநகராட்சியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள தளவாட பொருட்கள் வாங்குவது, திருச்சியில் அமையவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு ரூ.349.98 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த திட்ட பணிகளை மேற்கொள்ள அரசின் நிர்வாக அனுமதி பெறுதல்உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு மாநகராட்சி மேயர் அன்பழகன் விளக்கமளித்தார். அவரின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தின் போது வரும் 30-ஆம் தேதி திருச்சி மாநகராட்சியின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மாநகராட்சி மேயர் அன்பழகன் அறிவித்தார்..