அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவையின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் அறிமுக விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்லையா தலைமை தாங்கினார்.
மாநில செயல் தலைவர் குன்றக்குடி பெருமாள், மாநில பொதுச் செயலாளர் பழனிச்சாமி, மாநில முதன்மை செயலாளர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்தது எனவும் புதிய நிர்வாகிகள் இன்னும் மிக சிறப்பான செயல்பாடுகளை அகில இந்திய ராஜபுத்திரர் பேரவையில் செய்து காண்பிக்க வேண்டும் என ஆலோசனைகள் பெறப்பட்டது. இறுதியாக மாநில பொருளாளர் அருண்ராஜ் நன்றியுரை ஆற்றினார்